என் வாழ்வில் கடைசி உணவு; ஒன் லைன் ஓடர் செய்த வாடிக்கையாளர் விபரீத முடிவு!
என் வாழ்வில் கடைசி உணவு என உணவினை ஓடர் செய்துவிட்டு, வாடிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பற்றப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் “என் வாழ்க்கையில் கடைசி உணவு” என்ற குறிப்புடன் வாடிக்கையாளர் ஒருவர் உணவினை ஓடர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உணவினை விநியோகிப்பவர் வாடிக்கையாளரின் இடத்திற்கு சென்ற போது, வாடிக்கையாளரின் வீட்டில் அழைப்பு மணிக்கு யாரும் பதிலளிக்கவில்லை என்பதுடன் கதவையும் யாரும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த உணவு விநியோகிப்பவர் உடனடியாக அது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்தபோதும் வாடிக்கையாளர் கதவை திறக்க மறுத்துள்ளதுடன், கதவை திறந்தால் ஜன்னலால் வெளியே குதித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதன் பின்னர் வாடிக்கையாளரை அமைதிப்படுத்திய தீயணைப்பு படையினர் அவரது அறைக்குள் சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
தொடர்ந்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்ற உதவிய உணவு விநியோகிஸ்தருக்கு பொலஸார் நன்றிகளை தெரிவித்துள்ள நிலையில், குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் உணவு விநியோகஸ்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.