உக்ரைன் தொடர்பில் புடினின் இரகசியத்தைப் போட்டுடைத்த ராணுவம்
ரஷ்யா ராணுவம் மே 9ம் திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் மே 9ம்திகதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படைகளின் உளவுத்துறை தரப்பில் , " மே 9 ஆம் திகதி ரஷ்யா ஜெர்மனியை போரில் வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது.
அதனால் மே 9 ஆம் திகதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்துள்ளது" என கூறப்பட்டுள்ளது.