ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம் ; போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை!
இராணுவம் குறித்து போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10வது நாளாக இன்றும் நீடித்துள்ள் வரும் நிலையில் , இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் சூழல் காணப்படுகிறது.
இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் சேவைகள் என தொடர்ந்து பல தடைகளை விதித்து வருகிறது. ரஷியா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷிய அரசு ஊடகங்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதுடன், விளம்பர வருவாயையும் முடக்கி உள்ளன.
அதற்கு பதிலடியாக பேஸ்புக், டுவிட்டருக்கு ரஷியா முழுமையாக தடை விதித்துள்ளதுடன் ராணுவம் குறித்து போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்க அழைப்பு விடுப்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கின்றது. இதனையடுத்து ரஷியாவில் இருந்து செயல்படுவதை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாக பி.பி.சி. செய்தி குழுமம் அறிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எதிர்க்கும் வகையில் அங்கு மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சபாநாயகர் வியாசெஸ்லாவ் வொலோடின் (Vyacheslav Volodin) கூறுகையில்,
அமெரிக்காவில் இருந்து செயல்படும் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், ரஷியாவுக்கு எதிராக ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படும் சூழலை பார்க்க முடிகிறது. அவை வெறுப்பையும், பொய்களையும் பரப்புவதாக கூறியுள்ளார்.