உக்ரைன் அதிபர் தப்பி ஓட்டம்? ரஷ்ய ஊடகங்கள் பரபரப்பு தகவல்!
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) போலந்து நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த போரில் ரஷ்யாவின் முக்கிய குறியாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கருதப்படுகிறார். இதனால், ரஷ்ய அதிபர் புடினின் (Vladimir Putin) நேரடி பார்வையின் கீழ் 3 கூலிப்படை அனுப்பப்பட்டு உள்ளதாக சர்வதேச உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூலிப்படையின் ஒரே குறி, ரஷ்ய ராணுவத்துடன் உள்ளே நுழைந்து அதிபர் செலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) படுகொலை செய்வது மட்டுமே என கூறப்படுகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படையின் 3 தாக்குதல் முயற்சியில் இருந்து ஜெலன்ஸ்கி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
உக்ரைனில் பயங்கர போர் நடந்த சூழலிலும், தலைநகர் கீவ்வில் தனது பாதுகாவலர்களுடன் தங்கி இருந்த அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போலந்து நாட்டிற்கு தப்பி ஓடியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதேவேளை சில நாட்களுக்கு முன்பாக இதே போல் உக்ரைன் ராணுவத்தை சரணடையச் சொன்னதாக செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியது போல் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதன் பின்னர், கீவ் நகரின் தெருக்களில் நின்றபடி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.