போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி இதுதான் ; ஜெலன்ஸ்கி!
ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர , நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு (Vladimir Putin) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் , ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
அதேவேளை, சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற நேற்று நடத்த 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இதனால், சண்டையின் தீவிர தன்மை சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர புதினுக்கு (Vladimir Putin) ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறுகையில்,
ரஷிய படையினரிடம் உக்ரைன் வீழ்ந்தால் அடுத்த இலக்கு பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா) தான். ரஷிய அதிபர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தையே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றார்.
30 மீட்டர் இடைவெளியில் அல்ல. நான் உங்களை கடித்துவிடமாட்டேன் என கூறிய ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , நீங்கள் (புதின்) ஏதற்காக பயப்படுகிறீர்கள்?’ எனவும் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கும் (Emmanuel Macron) ரஷிய அதிபர் புதினுக்கும் (Vladimir Putin) இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவருக்கும் இடையேமிக நீளமான மேஜை அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.