தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இந்த நாட்டில் இரவில் தடை
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸானது தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
தற்போது வரையில் இந்த ஒமிக்ரோன் வைரஸானது சுமார் 23 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார்.
இதன்படி டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஜனவரி 9ஆம் திகதி வரை, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்கள் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.