அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம் ; வேகமாகப் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளான ரெனோ, நெவாடா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காட்டுத் தீக்கு இதுவரை 3 தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்துள்ளனா்.
நெவாடா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதிக்கு காட்டுத் தீ பரவியதும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமாா் 42,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
இதுதவிா்த்து மேலும் 45,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நெவாடா மாகாணத்தில் அவசரநிலையை அந்த மாகாண ஆளுநா் ஜோ லம்பாா்டோ பிரகடனம் செய்துள்ளாா்.
வாஷோ கவுன்டி பகுதியில் 2 நாள்களாக மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.