ஒன்றாரியோவில் இடிமின்புயலினால் ஏற்பட்ட பாதிப்பு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
ஒன்றாரியாவில் இடிமின்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான இடிமின்புயல் தாக்கம் ஏற்படும் என கனேடிய சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் 50 முதல் 70 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடிமின்புயல் தாக்கம் காரணமாக சுமார் 26000 பயனர்கள் மின்சார இணைப்பினை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை காரணமாக திடீர் வெள்ள நிலைமைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பநிலை நீடித்து வந்த நிலையில் இவ்வாறு மழை வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.