கனடாவின் பிரபலமான உணவுப் பொருளில் பூச்சிகள்!
கனடாவின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனத்தின் உணவுப் பொருட்களில் பூச்சிகள் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரலமான ரிம் ஹோர்டன் (Tim Hortons) பண்டக் குறியைக் கொண்ட கோழி நூடில்ஸ் சூப் பேஸ் (chicken noodle soup base) வகைகளில் இவ்வாறு பூச்சிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மற்றும் அல்பர்ட்டாவில விற்பனை செய்யப்பட்ட சூப் அடிப்படை பொருட்களில் இவ்வாறு பூச்சிகள் காணப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், டின்களில் அடைக்கப்பட்ட ரிம் ஹோர்டன் சூப் வகைகளில் எவ்வித பாதிப்பும் கியைடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வகை சூப்கள் சூப்பர் மார்கட்டுகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூப் பேஸ் வகைகள் பயன்படுத்திய எவரும் நோய்வாய்ப்பட்டதாக இதுவரையில் பதிவாகவில்லை.
பூச்சிகள் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்த பண்டங்கள் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சூப் தயாரிக்க பயன்படும் இந்த சூப் பேஜ் பொதியொன்று 3.54 கிலோ கிராம் எடையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.