விபத்தில் சிக்கிய கனேடிய பயணிகள் படகு... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கனடாவில் ரொறன்ரோ தீவு படகு சனிக்கிழமை பிற்பகல் ஜாக் லேடன் படகு முனையத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் இரண்டு சிறார்கள் உட்பட டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும் ரொறன்ரோ பொலிஸார் சம்பவப்பகுதிக்கு விரைந்தனர். மேலும், விபத்து தொடர்பில் ரொறன்ரோ காவல்துறை தலைவரும் உறுதி செய்துள்ளார்.
சம்பவத்தின் போது அந்த படகில் 912 பயணிகள் பயணித்துள்ளதாகவும் 6 ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பன்னிரண்டு பேர் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும், அவர்களில் பெரும்பாலோர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் ரொறன்ரோ அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.