கனேடியரால் இளம் வயது மகனை இழந்தேன்... நீதி கேட்டு போராடும் பிரிட்டன் தந்தை
ரொறன்ரோ பகுதியில் குடியிருக்கும் நபரிடம் இருந்து வாங்கிய பொருளால் பிரிட்டன் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் தந்தை, இந்த விவகாரத்தில் கனேடிய நிர்வாகம் தமக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பீல் பிராந்திய பொலிசாரும் தொடர்புடைய வழக்கில் கனேடிய நபரின் ஈடுபாடு குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 22 வயது டாம் பார்ஃபெட் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டாம் பார்ஃபெட் உளவியல் ரீதியான சிக்கலை எதிர்கொண்டு வந்ததாக அவரது தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இணையமூடாக வாங்கப்பட்டு கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சோடியம் நைட்ரைட்டை உட்கொண்டு டாம் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், ரொறன்ரோவை சேர்ந்த Kenneth Law என்பவரிடம் இருந்தே சோடியம் நைட்ரைட்டை டாம் வாங்கியதாக லண்டன் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, தற்கொலை செய்துகொள்ள விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே Kenneth Law சோடியம் நைட்ரைட்டை விற்பனை செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாகவே, Kenneth Law தமது இணைய பக்கமூடாக சோடியம் நைட்ரைட்டை விற்பனை செய்து வந்ததாகவும் லண்டன் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
ஆனால் கனேடிய சட்டப்பட்டி Kenneth Law சட்டப்பூர்வமாகவே செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.