ரொறன்ரோ நகரில் இப்படி ஒரு குறைபாடா?
கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரிய குறைபாடொன்று காணப்படுவதாக நகர முகாமையாளர் தெரிவிக்கின்றார்.
நகர வடிவமைப்பில் பாரிய குறைபாடு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக கடும் மழை ஏற்படும்போது வெள்ளத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நகரம் வடிவமைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரிய மழை வெள்ளம் ஏற்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியதுடன் வீடுகளும் நீரில் மூழ்கி இருந்தன.
மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அளவில் நீர் நிறையும் போது போது அதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் இந்த நகரம் வடிவமைக்கப்படவில்லை என நகரின் முகாமையாளர் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
எனவே வெள்ளத்தை கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எடுப்பதில் சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.