கனடாவில், காணாமல் போன 400 கிலோ தங்கம்; தொடரும் விசாரணை?
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் காணாமல் போய் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
எனினும், இதுவரையில் காணாமல் போன பொருட்களுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.
சுவிட்சர்லர்நதின் சூரிச் நகரிலிருந்து கனடாவிற்கு இந்த தங்கம் மற்றும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கம் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்களின் மொத்தப் பெறுமதி சுமார் 20 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பொதி களஞ்சியச்சாலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு 45 நிமிடங்களில் யாரோ அவற்றை களவாடிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெறுமதியான பொருட்கள் மாயமாகி ஓராண்டு கடந்துள்ள நிலையில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பியர்சன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க முடியும் என பிரம்டன் நகர முதல்வர் பெற்றிக் பிறவுண் தெரிவித்துள்ளார்.