கனடா விமான நிலையங்களில் குண்டு மிரட்டல்கள்
கனடாவில் உள்ள முக்கியமான ஆறு விமான நிலையங்களில் இன்று காலை ஏற்பட்ட குண்டு மிரட்டல்களுக்குப் பிறகு, விமான நிலைய நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
காலை நேரத்தில் ஒட்டாவா, மான்றியோல், எட்மண்டன், வின்னிபெக், கால்கரி மற்றும் வான்கூவர் விமான நிலையங்களின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களுக்கு குண்டு மிரட்டல்கள் வந்ததாக நேவ் கனடா என்னும் விமானப் பயணங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
வான்கூவரில், இரவு 2 மணி அளவில் நெவ் கனடா Nav Canada கட்டுப்பாட்டு கோபுரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து, மையம் காலியாக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எந்தவொரு மிரட்டலும் உண்மை அல்ல என்பதும், பொது மக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பதும் உறுதியாகியிருந்தது.
இதுவொரு தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புக்கு எந்தவொரு நம்பகமான ஆபத்தும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில கட்டடங்கள் காலியாக்கப்பட்டதன் பிறகு, அதிகாரிகளின் மதிப்பீட்டு முடிவின் அடிப்படையில், நடவடிக்கைகள் மெதுவாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களின் பொறுமைக்கு நன்றி” எனக் கூறப்பட்டுள்ளது.
விமான நிலைய நிர்வாகம், Nav Canada மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்து வருவதாகவும், சில விமானங்கள் இன்னும் சில மணிநேரங்களுக்கு தாமதப்படலாம் எனவும் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.