மெக்சிகோவில் பேருந்து மீது மோதிய லொறி: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
மெக்சிகோ நாட்டில் பேருந்து மீது லொறி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருவதாவது,
மெக்சிகோ - மைக்கோவாகன் மாகாணத்தில் உள்ள லா பீடாட்- விஸ்டா ஹெர்மோசா நெடுஞ்சாலையில் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று சென்றது.
யுரேகுவாரோ நகர் அருகே சென்றபோது இந்த லொறி திடீரென சார்தியின் கட்டுப்பாட்டை இழந்தது நிலைதடுமாறி எதிரில் வந்த பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் பேருந்தும், லொறியும் தீப்பிடித்து எரிந்தன.
இது தொடர்பில் தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இருப்பினும் இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் காயமடைந்த 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.