மொத்த காரணமும் அவர் தான்... மனைவி மீது பாய்ந்த டொனால்டு ட்ரம்ப்
நடந்து முடிந்த இடைக்கால தேர்தலில் தோல்வியடைந்த குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஆலோசனை வழங்கியதற்காக டொனால்டு டிரம்ப் அவரது மனைவி மெலானியா மீது குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஆதரவளித்து பரப்புரை மேற்கொண்ட குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர் டாக்டர் மெஹ்மத் ஓஸ் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் பரப்புரை மேற்கொண்ட முக்கிய நபர்களில் ஒருவர் டாக்டர் மெஹ்மத் ஓஸ். இந்த நிலையில், தமது மனைவி உட்பட பல மீதும் ட்ரம்ப் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
டாக்டர் மெஹ்மத் ஓஸ் என்பவரை ஆதரிக்க தம்மை கட்டாயப்படுத்தியவர்கள் மீதும் டாக்டர் மெஹ்மத் ஓஸ் மீது அவர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர். டாக்டர் மெஹ்மத் ஓஸ் என்பவரை ஆதரிக்க மெலானியா எடுத்த முடிவு சிறந்ததல்ல என கூறும் ட்ரம்ப்,
பலர் எதிர்ப்பு தெரிவித்தும், டாக்டர் மெஹ்மத் ஓஸ் என்பவரை ஆதரிக்க முடிவு செய்ததுடன், பொதுக்கூட்டம் ஒன்றில் எதிர் தரப்பு வேட்பாளரான Dave McCormick என்பவரை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது 2024 தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் அறிவிக்கும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று டிரம்பை அவரது நெருங்கிய வட்டாரத்தில் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.