தீவிர இடதுசாரி பைத்தியம்... கனடா பிரதமரை திட்டித்தீர்த்த டிரம்ப்
தடுப்பூசி கட்டாயம் என்ற விதி தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி கனடா தலைநகரை ஸ்தம்பிக்க வைத்துள்ள லொறி சாரதிகள் போராட்டத்திற்கும் டொனால்டு டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொனால்டு டிரம்ப், தீவிர இடதுசாரி பைத்தியமான ஜஸ்டின் ட்ரூடோவின் கடும்போக்கு கொள்கைகளுக்கு எதிராக லொறி சாரதிகள் மிக அமைதியாக போராடி வருகின்றனர் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேவையற்ற கொரோனா கட்டுப்பாடுகளால் ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களை துன்புறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அறவழியில் போராடும் லொறி சாரதிகளுக்கு எதிராக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் சதி செய்வதாகவும் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் எந்த நாட்டிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் ஆபத்தானதும் கூட என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.