கனடா பிரதமர் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு டிரம்ப் வாழ்த்து
கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி நேற்று நடைபெற்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
, “இரு தலைவர்களும், தங்கள் நாடுகள் சுயாதீன மற்றும் இறைமையுள்ள நாடுகளாக இருந்தும், ஒன்றாக இணைந்து மக்களுக்கு நன்மை ஏற்படுத்துவது முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டனர்” என பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கார்னி மற்றும் டிரம்ப் இருவரும் நெருங்கிய காலத்தில் நேரில் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை, வழமையான ராஜதந்திர முறையை பின்பற்றி மார்க் கார்னி மற்றும் அவரது கட்சியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப் கடந்த காலங்களில் கூறியிருந்தபடி "கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்ற" வேண்டும் என்ற கருத்தை தவிர்த்து, மரியாதையுடனான வாழ்த்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.