அமைச்சரவைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்!
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
Donald has fallen asleep in his own cabinet meeting. pic.twitter.com/LVZV53zxgg
— Gavin Newsom (@GavinNewsom) December 2, 2025
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.