நான் நினைத்தால் சீனா அழிந்துபோகும்; பகிரங்க மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
200 சதவீதம் வரை வரி
இதுதொடர்பாக வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.
நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.
அதேநேரம், "இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்" என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.