கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.