இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தில் பரபரப்பு!
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால், சிறிது நேரம் விவாதம் தடைப்பட்டது.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனாக் (Rishi Sunak)மற்றும் லிஸ் டிரஸ்(Liz Truss) இடையே பிரதமர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
இருவரும் டாக் டிவி தொலைக்காட்சி விவாதத்தில் நேற்று பங்கேற்றிருந்த நிலையில், அதை தொகுத்து வழங்கி கொண்டிருந்த கேட் மெக்கன்(Kate McCann) திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது மருத்துவர் அறிவுரைப்படி, கேட் மெக்கன் (Kate McCann)விவாதத்தை தொடர முடியாத நிலையில், இயான் காலின்ஸ்(Ian Collins) என்பவர் மூலம் விவாதம் தொடர்ந்தது.