பிரான்ஸில் பதறவைத்த சம்பவம்; குளிர்சாதனப்பெட்டியில் இரு குழந்தைகளின் சடலம்
பிரான்ஸில் குளிர்சாதனப்பெட்டி ஒன்றில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை அடுத்து குழந்தைகளின் தாயார் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டார். பிரான்சின் வடகிழக்கு பகுதியான Aillevillers-et-Lyaumont (Haute-Saône) நகரில் இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தமைக்குரிய காரணங்கள் கண்டறியப்படவில்லை
அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். வீட்டுக்கு விரைந்து சென்ற அவர்கள் அங்குள்ள குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்து இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உயிரிழந்தமைக்குரிய காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
அக்குழந்தைகளின் தாயார் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று புதன்கிழமை Boulogne-Billancourt (Hauts-de-Seine) நகரில் ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் பிற்பகல் 1 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.