கனடாவின் கியூபிக் மாகாணத்தில் கடும் புயல் தாக்கம்; இருவரைக் காணவில்லை
கனடாவின் கியூப் மாகாணத்தில் கடுமையான புயல் காற்று மழை வெள்ளம் காரணமாக பாரியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
புயல் காற்று தாக்கத்தினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இரண்டு பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புயல் காற்றினால் வீதியில கிடந்த பொருட்களை அகற்றுவதற்கு முயற்சித்த போது நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கியூப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்று வீசியதாகவும் இதனால் பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் விழுவதை முதல் தடவையாக தாம் பார்த்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதேவேளை, மொன்றியலிலும் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.