இரண்டு விமானங்கள் வானில் மோதி விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த சாகச நிகழ்ச்சியின்போது, இரண்டு விமானங்கள் வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வானில் ஒரு விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதியதில் இரண்டு விமானங்களும் அப்படியே கீழே விழுந்து வெடித்து சிதறின.
இந்த விபத்தால், ஆறு பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
BREAKING: 2 planes, including a B-17 Flying Fortress, collide at Dallas airshow pic.twitter.com/hdieiJuqvX
— BNO News Live (@BNODesk) November 12, 2022
போயீங் பீ-17 குண்டு தாங்கி விமானமும், மற்றொரு சிறிய விமானமும் வானில் மோதியுள்ளன. இந்த இரு விமானங்களின் விமானிகள் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தால், பலரும் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதில், இந்த விபத்து சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பீ-17 குண்டு தாங்கி விமானம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் விபத்துக்குள்ளான உடனேயே அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மக்கள் அலறி அடித்து ஓடினர். விமானப்படையின் நிகழ்ச்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.