துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் முயற்சி ; ஈரானுக்கு UAE கடும் கண்டனம்
துருக்கி குடியரசை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்ததாகக் கூறப்படும் தூண்டுதல் அற்ற தாக்குதல் முயற்சியை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கடுமையாக கண்டித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இத்தகைய முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி வான்வெளிக்குள் நுழைந்த பின்னர், வட அத்திலாந்திக் உடன்படிக்கை அமைப்பின் (NATO) வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணையை வெற்றிகரமாகத் தடுத்து அழித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் முயற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும், ஒரு நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் ஆபத்தான பதற்ற உயர்வாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் (MoFA), சகோதர மற்றும் நட்பு நாடுகளை தொடர்ந்து குறிவைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட மற்றும் அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்றும் அவை பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும் என்றும் தெரிவித்துள்ளது