பிரித்தானிய பிரதமர் தேர்தல்: ஆய்வில் வெளியான பரபரப்பு தகவல்
பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனாக்கை (Rishi Sunak) விட வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் (Liz Truss) முன்னிலை பெறுவார் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
பிரித்தானிய நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில், 3 பேர் வாபஸ் பெற்றனர்.
இதனால், போட்டி வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக இருந்தது. இதில், ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த ஓட்டு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்தனர். இதனால், இறுதி போட்டியில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் வேட்பாளர்களாக மீதமுள்ளனர்.
இவர்கள் இருவரில் ஒருவர் ஒகஸ்ட் 4-ம் திகதி முதல் செப்டம்பர் தொடக்கம் வரை நடைபெறும் வாக்கு பதிவில் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுபற்றி யூகவ் என்ற அமைப்பு சார்பில் நடந்த சர்வே ஒன்றில், சுனாக்கை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரஸ் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி, ரிஷி சுனாக்கிற்கு ஆதரவாக 31 சதவீத உறுப்பினர்கள் வாக்கு செலுத்துவார்கள். டிரஸ்சுக்கு ஆதரவாக 49 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்திடுவார்கள்.
15 சதவீத உறுப்பினர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள் என தற்போது தெரியவில்லை. இந்த தேர்தலில், 6 சதவீத உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்போம் என தெரிவித்து உள்ளனர்.
இதனால், பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனாக்கை விட வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.