88 விமானங்களை இழந்த ரஷ்யா! உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா 11-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யப் படைகள் 88 விமானங்கள் மற்றும் ஹெல்காப்டர்களை இழந்துள்ளன. பல ரஷ்ய விமானிகள் பிடிபட்டுள்ளனர். உக்ரைனின் ஆயுதப் படைகள் தென்கிழக்கில் உள்ள பெரிய துறைமுக நகரமான மேரியோபோலைத் தொடர்ந்து தற்காத்து வருகின்றன.
“கணிசமான அளவு” ரஷ்ய உபகரணங்கள் மைகோலேவ் பகுதியில், தெற்கே ஒடெஸ்ஸாவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டன. உக்ரைனின் எதிர்ப்பின் வலிமையால் ரஷ்யப் படைகள் “மனச் சோர்வு” அடைந்துள்ளனர்.
இதேவேளை, உக்ரைனில் தனது படைகளால் ஏற்பட்ட இழப்புகளின் சில விவரங்களை ரஷ்யா வழங்கியுள்ளது.
ஆனால், உக்ரைனியே எதிர்ப்பின் வலிமையால் அது ஆச்சர்யம் அடைந்துள்ளதாகவும், அதன் விநியோகப் பாதைகள் மற்றும் படைகளின் மன உறுதியில் சிக்கலைச் சந்தித்துள்ளதாகவும் ராணுவ வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.