உக்ரைன் குழந்தைகள் கடத்தல் விவகாரம் ; 16 ரஷ்ய அதிகாரிகளுக்கு EU தடைகள்
உக்ரைன் போரின்போது ஆயிரக்கணக்கான சிறுவர்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, 16 ரஷ்ய அதிகாரிகள் மற்றும் 7 பயிற்சி மையங்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போர்காலத்தில், சுமார் 20,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ரஷியாவுக்கு கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரைன் அடையாளத்தை மறந்து ரஷ்ய கலாசாரத்தை ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதற்கிடையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கெனவே கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்டவர்களில் இதுவரை சுமார் 2,200 சிறுவர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்டுவர தூதரக முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள புதிய தடைகள், சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை வட்டாரங்களில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.