உக்ரைனில் இருந்து இரு நாட்களில் 7400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்!
உக்ரைனில் இருந்து இதுவரை 6200 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு தினங்களில் மேலும் 7400 பேர் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான இன்று (03-03-2022) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைனில் உள்ள "இந்திய மாணவர்களை வேகமாக மீட்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்திய விமான சேவைகள் வேகமான மீட்புப் பணிகளை நோக்கி பணியாற்றி வருகின்றன.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜ்ஜு மற்றும் வி.கே.சிங் ஆகியோர் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சென்று மீட்புப் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
நாளை 3500 இந்தியர்களும் அதற்கு அடுத்த நாள் 3900 இந்தியர்கள் என மொத்தம் 7400 பேர் இரண்டு நாட்களில் அழைத்து வரப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.