மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ள உக்ரைனின் இரு நகரங்கள்!
சுமி மற்றும் மேரியோபோல் நகரங்களின் நிலைமை, “மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன,” என்று உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இன்று ஞாயிற்றுக்கிழமை (06-03-2022) காலை அவர் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள அக்திர்கா மற்றும் ட்ரோஸ்டியானெட்ஸ் நகரங்களில் தற்போது மின்சாரம் அல்லது நீர் விநியோக இல்லை என்று அரசாங்க ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ கூறினார்.
மேரியோபோல் நகரிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முந்தைய போர் நிறுத்தம், 30 நிமிடங்களுக்குக் குறைவாகவே நீடித்தது. அதற்கு ஷெல் குண்டு தாக்குதல் தொடங்கிவிட்டது என்று உக்ரைனியே அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களைக் கேட்டிருந்தோம்.
எப்படியிருப்பினும், மனிதாபிமான வழித்தடம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என்று கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் டொனெட்ஸ்கில் உள்ள ஓர் அதிகாரியான எட்வர்ட் பாசுரின் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.