கார்கிவ் நகரை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்திய தூதரகம் உத்தரவு
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக கங்கா என்ற நடவடிக்கையின் பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
உக்ரைன் மீது கொடூரமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் ஒரு சில பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 7வது நாளாக தொடர்ந்து போர் நடைபெறும் நிலையில், கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் நடத்துகின்றன.
எனவே, பாதுகாப்பு கருதி கார்கிவில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
கார்கிவில் இருக்கும் இந்தியர்கள் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் அங்கு சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.