ரஷ்யாவை எதிர்த்து வெளிநாடொன்றில் பேரணியில் ஈடுப்பட்ட மக்கள்!
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் பேரணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது 11 ஆவது நாளாக ரஷ்யா தொடர் தாக்குதலில் நடத்தி வருகிறது. கடந்த 24 ஆம் திகதி முதல் போரில் ஈடுபட்ட ரஷ்யா, ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் டோக்கியோவில் பேரணி நேற்றைய தினம் சனிக்கிழமை (05-03-2022) நடத்தினர்.
அவர்கள், “போரை நிறுத்துங்கள். உயிர்களைப் பாதுகாக்கவும்." சிலர் "நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம்" என்று எழுதப்பட்ட பலகைகளுடன் பேரணி நடத்தினர்.