உக்ரைன் மண்ணில் இருக்கும் ரஷ்ய ஆயுத கழிவுகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துள்ள போர் முடிந்தாலும் அந்நாட்டு மண்ணில் இருக்கும் ரஷ்ய துருப்புகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி (Denys Monastyrsky) கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
“உக்ரைன் நாட்டின் மீது ஏராளமான குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி வெடிக்கவில்லை. அவை இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றை அகற்ற மாதங்கள் அல்ல, வருடங்கள் ஆகும்” என்றார்.
மேலும் அவர், ரஷியாவின் ஆயுத கழிவுகள் தவிர, ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க விமான நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உக்ரைன் வீரர்கள் கண்ணிவெடிகளை புதைத்துள்ளனர். அவற்றையும் எங்களால் உடனடியாக அகற்ற முடியாது. எனவே இவற்றை அகற்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவி தேவை” எனவும் கூறினார்.