ரஷியாவின் ஆக்கிரமிப்பால் தவிக்கும் உக்ரைன்; நாங்க இருக்கோம்....ஆதரவு தெரிவித்த அமேசான்
ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் , உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கும் என்றும், தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி (Andy Jassy) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் தொகை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை வெளியிட்டு உள்ளது.
உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே ரஷிய தாக்குதலால் கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவியையும் அளித்து வருகின்றது.
The situation in Ukraine is deeply concerning, and gets more so each day. Amazon stands with the people of Ukraine, and will continue to help. (1/2)
— Andy Jassy (@ajassy) March 3, 2022
இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் சி.இ.ஓ. ஆண்ட்டி ஜெஸ்சி (Andy Jassy) தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டரில்,
“உக்ரைன் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது. தொடர்ந்து உதவி செய்யும். அமேசான் மற்றும் எங்கள் ஊழியர்களிடமிருந்து பண நன்கொடைகள், தேவைப்படுபவர்களுக்கு பொருட்களைப் பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தேவையான இணைய பாதுகாப்பு உதவி ஆகியவற்றின் மூலம் தரையில் உள்ள மனிதாபிமான அரசு சாரா நிவாரண அமைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.