மாணவர்களை மீட்க உக்ரைனுக்கு சென்ற இந்திய மந்திரி; ரோமானிய மேயருக்கு குட்டு ; வைரலாகும் காணொளி
மாணவர்களை மீட்க உக்ரைனுக்கு சென்ற இந்திய அதிகாரி ரோமானிய மேயருக்கு வார்த்தைகளால் குட்டு வைத்த வைத்த காணொளி வைரலாகியுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு முழுவீச்சில் செய்து வருகிறது.
இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மத்திய மந்திரிகள் அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். அந்த வகையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இப்போது ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் உள்ளார்.
இந்நிலையில் அவருக்கும் ரோமானிய மேயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரோமானிய தலைநகர் புச்சாரெஸ்ட் நகரத்தில் மாணவர்கள் தஞ்சமடைந்து இருக்கும் முகாம்களில் அவர் சென்று பார்த்து, அவர் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
Jumlas can work in India, but not on foreign soil. See how Romanian Mayor schooled the Civil Aviation Minister Jyotiraditya ScIndia at a relief camp.
— Salman Nizami (@SalmanNizami_) March 3, 2022
- Explain to them when they will leave home. I provided them shelter & food, not you!
.. students clap! ? pic.twitter.com/Shu4wUFtpA
அப்போது அங்கு வந்த ரோமானிய மேயர் குறுக்கிட்டு அவருடைய பேச்சை நிறுத்தி, “மாணவர்களிடம் நான் அவர்களுக்கு செய்த உதவிகளை எடுத்துக்கூறுங்கள். அவர்களுக்கு நான் தான் உணவு அளித்தேன், தங்குமிடம் கொடுத்தேன்,மேலும் பல உதவிகளை செய்தேன். இவற்றை செய்தது நான் தான் என்று சொல்லுங்கள். நீங்கள் செய்யவில்லை என்பதையும் சொல்லுங்கள் காட்டமாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மந்திரி, அவரிடம் தள்ளி நிற்க சொன்னார். பின், “என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும், அதை நீங்கள் எனக்கு கூற தேவையில்லை” என்றார்.
அதன்பின்னர் இந்திய மாணவர்களிடம், ரோமானிய அரசு இந்தியரக்ளுக்காக செய்த உதவிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.