முதன்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்திய உக்ரைன்!
முதன் முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி தாக்குதலை நடாத்தியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷ்யா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ரஷ்யா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை ராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.