உக்ரேனுக்கு அனுப்பிய ராக்கெட்டு குண்டுகளில் கனேடியர்கள் எழுதிய அந்த வாசகம்
கனடாவில் இருந்து உக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராக்கெட்டு குண்டுகளில், அன்புடன் கனடாவில் இருந்து என்பது உள்ளிட்ட வாசகங்களை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ராக்கெட்டு குண்டுகளை சமீபத்திய வாரங்களில் உக்ரேனிய ராணுவம் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கனேடியர்கள் அனுப்பிய குண்டில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததை உக்ரேனிய துருப்புகள் வெளியிட்ட புகைப்படங்களில் இருந்தே தெரிய வந்துள்ளது.
மேலும், இது நிதி திரட்டும் பொருட்டாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், இதில் இருந்து திரட்டப்படும் நிதியில் உக்ரேனிய இராணுவத்திற்காக தளவாடங்கள் வாங்க உள்ளனர். 150 டொலர் முதல் 2,000 டொலர்கள் வரையில் நிதியளிக்கலாம் எனவும் தொடர்புடைய இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் உக்ரேனிய பெண் ஒருவர் இந்த நடவடிக்கையை பழி தீர்க்கும் வாய்ப்பாகவே கருதி, நிதி அளித்துள்ளதுடன், உக்ரைனுக்கு மகிமை. கனடா உங்களுக்கு துணை இருக்கும் என வாசகம் எழுதியுள்ளார்.
இந்த அமைப்பானது இதுவரை உக்ரேனுக்கு ஆதரவாக 200,000 அமெரிக்க டொலர்கள் வரை திரட்டியுள்ளதுடன், இராணுவ வாகனங்கள், ட்ரோன் விமானங்கள் வாங்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.