உக்ரைனியர்கள் பயங்கரமான ரவுடிகள்; அதிபர் புடின் பேச்சு
உக்ரைனியர்கள் பயங்கரமான ரவுடிகள் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறியுள்ளார்.
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புடின்(Vladimir Putin) நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
உக்ரைனியர்கள் பயங்கரமான ரவுடிகள்.அவர்களது ராணுவம் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது.
ஆனால், அப்பாவி உயிர்களை காப்பாற்ற ரஷிய ராணுவம் சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதல் சிறப்பு ராணுவ நடவடிக்கையால் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
இந்த நடவடிக்கை கிழக்கு டான்பாஸ் நகரை பாதுகாக்கவே நடத்தப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு நடவடிக்கையின் போது மூத்த தளபதி உள்பட ரஷிய ராணுவத்தின் சிலர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.