இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியா குட்டரெஸ், இரண்டு தரப்பினரும் உடனடியாக மோதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுடன் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்தார்.
இதனிடையே, ஐ.நா.விடம் முறையிட்டுள்ள இஸ்ரேல், ஈரான் இஸ்லாமிய புரட்சி படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, உலக அமைதிக்கு வழிவகுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா.விடம் முறையிட்டும், 13 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விதிகளுக்கு உட்பட்டு பதிலடி கொடுத்ததாக ஈரான் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளது.
ஆனால், ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பிரான்ஸிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்