கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த குடும்பம்; இறுதி நேரத்தில் ஏற்பட்ட திருப்பம்
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த குடம்பம் ஒன்று இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் பெண் ஒருவரும் மூன்று பிள்ளைகளையும் கனடிய அதிகாரிகள் விசேட விமானம் மூலம் நாடு கடத்தவிருந்தனர்.
கியூபெக்கின் ட்ரொயிஸ் ரைவர்ஸ் பகுதியில் வசித்து வந்த பெண் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடு கடத்தப்படவிருந்தனர்.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீடு காரணமாக இந்த நாடு கடத்தல் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தியுள்ளது. 11, 9 மற்றும் 6 வயதான மூன்று பிள்ளைகள் மற்றும் தாயை நாடு கடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அர்லைன் ஹ_ய்லார் என்ற பெண்ணும் அவரது பிள்ளைகளும் இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர்.
இந்தப் பெண்ணின் கணவரான டேவிட் அஜிபாடே சில தினங்ளுக்கு முன்னர் நைஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஏதிலி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த குடும்பத்தை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.