பிரித்தானியாவில் மீண்டும் கொரோனாவின் கோரத்தாண்டவம்! ஒரே நாளில் இத்தனை பேரா?
பிரித்தானியாவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில்24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டதோடு 147 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 17 இலட்சத்து 67 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 47 ஆயிரத்து 720 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 16 இலட்சத்து 58 ஆயிரத்து 173 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 872 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 38,889 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 99 இலட்சத்து 61 ஆயிரத்து 369 பேர் குணமடைந்துள்ளனர்.