அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் கடுப்பான புடின்!
உக்ரைனுக்கு 100 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe biden) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 100 கோடி டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்குதாகவும், ரஷ்ய இராணுவ நடவடிக்கையால் அகதிகளான ஒரு லட்சம் பேருக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபி ஜோ பைடன் (Joe biden) தெரிவித்தார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில் நேட்டோ நாடுகள் மாநாடு, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பைடன் (Joe biden) , ரஷ்யா பாதுகாப்புத்துறை நிறுவனங்கள், அதன் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 400 பேர் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்தார்.
உக்ரைனில்இரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியது உறுதியானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
அத்துடன் சீனா மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த பைடன், சீனாவின் பொருளாதாரம் ரஷ்யாவுடன் இருப்பதை விட மேற்கு நாடுகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதை அதிபர் ஜின்பிங் (Xi Jinping) புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோபைடன் (Joe biden) இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.