எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்று கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
எலான் மஸ்க்குக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் ஏற்ப்பட்டுள்ள விரிசலினை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட மஸ்க்கின் மன்னிப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் விரிசல் ஏற்பட்டதையடுத்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ட்ரம்ப் குறித்து, தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ‘கடந்த வாரம் ட்ரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன.
அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். இந்த மன்னிப்பை ஏற்று கொண்ட ட்ரம்ப், அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விடயம் என்றார்.