அமெரிக்காவில் பிரபல கடைக்குள் புகுந்து தொலைக்காட்சிகளை உடைத்த நபர்!
டெக்சாஸ் மாநில ரியோ கிராண்டே (Rio Grande) நகரில் செயல்பட்டு வரும் வால்மார்ட்டின் கிளை ஒன்றில் இரண்டு தினங்களுக்கு முன் எசக்கியல் மெண்டோசா (Ezequiel Mendoza) என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்தார்.
குறித்த கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த அவர், திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க தொடங்கினார்.
Man arrested for smashing TVs at Walmart
— Unlimited L's (@unlimited_ls) January 25, 2024
TEXAS – man was arrested in Rio Grande City on Monday morning after going on a smashing spree, destroying 19 televisions with a baseball bat worth between $7,000 to $8,000 inside a Walmart pic.twitter.com/shrZvemfDu
ஊழியர்கள், அவரது இந்த செயலை எதிர்பாராததால், செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மெண்டோசா, வரிசையாக ஒவ்வொரு தொலைக்காட்சியாக உடைத்து கொண்டே சென்றார்.
கடை ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொலிஸார் அவரை மடக்கி, கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் ($7178) ஆகும். தொடர்ந்து மெண்டோசா ஸ்டார் கவுன்டி (Starr County) சிறையில் அடைக்கப்பட்டார். மெண்டோசாவின் செய்கைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.