கனடாவில் சிசு ஒன்றின் உயிர்காக்க நபர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்
கனடாவின் டொரன்டோ பகுதியில் சிசு ஒன்றின் உயிரை காப்பாற்றுவதற்காக நபர் ஒருவர் நெகிழ்ச்சியான செயலொன்றை மேற்கொண்டுள்ளமை சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகின்றது.
இளைஞர்கள் கூட்டம் ஒன்று வானவேடிக்கைகளையும் பட்டாசுகளையும் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பட்டாசு கொளுத்தி சிசுமீது வீசி எறிந்த இளைஞர்கள்
இதன்போது இரண்டு பேர் சிசுவொன்றுடன் அந்தப் பகுதியில நடந்து சென்றதாகவும், அப்போது குறித்த இளைஞர்கள் சிசுமீது பட்டாசு கொளுத்தி வீசி எறிந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது சற்றும் தயங்காது அங்கிருந்த நபர் ஒருவர் அந்த சிசுவை காப்பாற்றுவதற்கு பட்டாசு வீசப்பட்ட திசைக்கு தனது நெஞ்சை கொடுத்து, பச்சிளம் பாலகனுக்கு ஆபத்து நேர்வதனை தடுத்துள்ளார்.
இரண்டு 17 வயது சிறுவர்களும் 16 வயதான சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் இவ்வாறு பாதுகாப்பற்ற வகையில் பட்டாசுகளை கொளுத்தி ஏனையவர்களுக்கு தொந்தரவு செய்துள்ளதாக போலீசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சிறுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.