பிரான்சில் இளம் பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து
ஒரு இளம் பெண் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இச்சம்பவம் Viroflay (Yvelines) இல் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய ஒருவரே தாக்கப்பட்டுள்ளார். அதிகாலை Avenue du Général-Leclerc என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் சுற்றி வளைக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அந்த பெண்ணை கத்தியால் தாக்கினர். எட்டு முறை வரை பெண் கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் அந்த பெண்ணின் போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். Yvelines மாவட்ட பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.