உக்ரைன் மீதான போர்; ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!
உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ள நிலையில் உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சை (Yanukovych) மீண்டும் அந்நாட்டின் அதிபராக்க ரஷியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷிய படைகள் உக்ரைன் மீது இன்றும் 7-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேவேளை உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும், மற்றொரு பக்கம் போர் உக்கிரம் அடைந்து வருவது சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சை (Yanukovych) மீண்டும் அதிபராக்க ரஷியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் விக்டர் யனுகோவிச் இருப்பதாகவும் ரஷியா தகவல் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2010-2014 காலகட்டத்தில் உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் (Yanukovych) 'உக்ரேனிய புரட்சி' மூலம் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.