இந்தியா சென்ற ரஷ்ய ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு
இந்தியா சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புடினை, ஆயுதப் படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இந்த நிலையில், ஹைதராபாத் இல்ல அரங்கில் நாளை காலை உத்தியோகபூர்வ வரவேற்பு இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாநாடு
பின்னர், இரண்டு நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கும் 23 ஆவது ஆண்டு மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அரச தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய அலைவரிசையை, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.