உலக மக்களுக்கு பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை!
இதுவரை நாம் பார்த்திராத மிக மோசமான பாதிப்பாக ஒமைக்ரான் வைரஸ் இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் (Bill Gates) எச்சரித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனாவால், அமெரிக்காதான் பெரும் பாதிப்புக்கு ஆளானது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமைக்ரானும் அமெரிக்காவை ஆட்டம்காண வைத்துள்ளது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து பில் கேட்ஸ் (Bill Gates), உலகிற்கு எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "தனது நண்பர்கள் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயின் மோசமான காலகட்டத்திற்குள் நாம் நுழையலாம் " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் "வரலாற்றில் எந்த வைரஸையும் விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாட்டிலும் பரவும்" என தெரிவித்துள்ளார்.
"ஒமைக்ரான் தொற்று எந்த அளவிற்கு உங்களை பாதிக்கும் என்பது தெரியாது .இது டெல்டா வகையை விட குறைவான பாதிப்பாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்திராத மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும்" எனவும் பில் கேட்ஸ் (Bill Gates)தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கைகள் எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்திய பில் கேட்ஸ் (Bill Gates), அனைவரயும் முகமூடி அணியவும் , தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவது நமக்கு மேலும் பாதுகாப்பை நல்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலைமை எப்போதும் இவ்வாறு இருக்காது என தெரிவித்த பில் கேட்ஸ் (Bill Gates) ஒரு நாள் தொற்றுநோய் முடிவுக்கு வரும், நாம் ஒருவரையொருவர் நன்றாக கவனித்துக்கொள்ளும் நாள் விரைவில் வரும் எனவும் பதிவிட்டுள்ளார்.